Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 21)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்வம் – 2 – அசித் அல்லது அசேதனம் - அசேதநத்தின் இலக்கணம்
மூலம் - த்ரிவிதாசேதநங்களும் பரருக்கே தோன்றக் கடவனவாயிருக்கும். அசேதநத்வமாவது ஞானாச்ரயமன்றிக்கேயொழிகை. பிறருக்கே தோன்றுகையாவது தன் ப்ரகாசத்துக்குத்தான் பலியன்றிக்கேயொழிகை. இவையிரண்டும் தர்மபூத ஞானாதிகளுக்கும் துல்யம்.
மூன்றுவகையான அசேதநங்கள் மற்றவர்களுக்காக தோன்றுகின்றனவே அல்லாமல் தங்களுக்காக அல்ல. அசேதநம் என்றால் ஞானம் இன்றி இருத்தல் என்பதாகும். மற்றவர்களுக்காக தோன்றுதல் என்பதன் பொருளாவது, அவை தங்களுக்குத் தாங்களே பயன் அளித்துக்கொள்வதில்லை என்பதாகும். இவைகளுடைய தர்மபூதஞானம் என்பதற்கும் இந்த இரண்டும் (ஞானம் இல்லாமல் இருக்கும் நிலை, தனக்காக இல்லாமல் உள்ள நிலை) பொருந்தும்.