Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 17)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தர்மபூத ஞானம்
மூலம் - இதுக்கு ப்ரவ்ருத்தியாவது விஷயங்களை ப்ரகாசிப்பிக்கையும், ப்ரயத்நாவஸ்தையிலே சரீராதிகளைப் ப்ரேரிக்கையும், பத்த தசையில் ஸங்கோச விகாரங்களும், ஆனுகூல்ய ப்ரதீகூல்ய ப்ரகாசமுகத்தாலே போகமென்கிற அவஸ்தையை அடைகையும். போகமாவது தனக்கு அனுகூலமாகவாதல், ப்ரதிகூலமாகவாதல் ஒன்றை அனுபவிக்கை.
தர்மபூதஞானத்தின் செயல்பாடு (ப்ரவ்ருத்தி) என்பது என்னவெனில் அனைத்து விஷயங்களையும் உணர்த்துவது (விஷயங்கள் குறித்த ஞானம் ஏற்படுத்துவது), சரீரம் மற்றும் புலன்களை வழி நடத்தவோ அல்லது வழி நடத்த விருப்பமோ கொள்வது, ஸம்ஸார நிலையில் சுருங்கியும் விரிவடைந்தும் இருப்பது, விஷயங்களை அனுபவிப்பதன் மூலம் எது ஏற்கப்படலாம் எது தள்ளப்படலாம் என்று உணர்த்துவது போன்றவை ஆகும். போகம் என்பது எந்தப் பொருள் தனக்கு ஏற்கும், எது ஏற்காது என்று அனுபவத்தின் மூலம் அறிதல் ஆகும்.