Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 16)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

தர்மபூத ஞானம்

மூலம் - இத்தர்மபூதஞானம் விஷயப்ரகாச தசையிலே ஸ்வாச்ரயத்துக்கு ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கும். இது ஈச்வரனுக்கும், நித்யருக்கும் நித்யவிபுவாயிருக்கும். மற்றுள்ளோருக்கு ஸம்ஸாராவஸ்தையில் கர்மானுரூபமாக பஹுவித ஸங்கோச விகாஸவத்தாய் முக்தாவஸ்தையிலே ஏகவிகாஸத்தாலே பின்பு யாவத்காலம் விபுவாயிருக்கும்.

இந்த தர்மபூதஞானம் என்பது அந்தந்த ஆத்மாவிற்கு ஒரு விஷயத்தைக் குறித்து உணர்த்தும் நேரத்தில், தானாகவே தகுந்த காலத்தில் வெளிப்பட்டுவிடும். ஸர்வேச்வரனுக்கும் நித்யர்களுக்கும் இது எப்போதும் எங்கும் எல்லாவற்றையும் அறியும் விதமாக பரந்து காணப்படும். ஸம்ஸாரத்தில் உள்ள மற்றவர்களுக்கு, அவரவர்களின் கர்மங்களுக்கு ஏற்ப இது சுருங்கியும் விரிவடைந்தும் காணப்படும். முக்தர்களுக்கு இது ஒரு முறை நன்றாக மலர்ந்து, பின்னர் சுருங்காமல் அப்படியே நீடித்து நிற்கும்.