Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தர்மபூத ஞானம்
மூலம் - இவ்வாத்மாக்களெல்லாருக்கும் தர்மிஸ்வரூபம் போலே தர்மபூதஞானமும் த்ரவ்யமாயிருக்க, இதின் ஸ்வரூபத்தைத் தனித்து இங்கு அருளிச் செய்யாதொழிந்தது சேதநரென்று எடுத்த விசிஷ்டத்திலே விசேஷணமாய்ச் சொருகி நிற்கையடியாக.
(தர்மபூதஞானம் என்றால் என்ன - ஆத்மா என்பது ஞானமயமானது. அதன் ஸ்வரூபம் என்பது ஞானமே ஆகும். அதே நேரத்தில் ஞானம் என்பதைத் தனது ஒரு தன்மையாகவும் ஆத்மா கொண்டுள்ளது. இந்த ஞானம் தர்மபூதஞானம் என்பதாகும்). அனைத்து ஆத்மாக்களுக்கும் ஸ்வரூபம் என்பது ஒரு அடிப்படையாக உள்ளது போன்று, தர்மபூதஞானமும் அடிப்படையாக உள்ளது. இத்தகைய தர்மபூதஞானத்தின் ஸ்வரூபத்தை இங்கு கூறாமல் விட்டதற்குக் காரணம், சேதநன் என்று கூறும்போது அந்தப் பதத்திலேயே அடங்கி விடுவதால் ஆகும்.