Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

சேதனனின் செயல்பாடு

மூலம் - இப்படியிருக்கிற சேதனருக்குப் ப்ரவ்ருத்தியாவது பராதீனமுமாய் பரார்த்தமுமான கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும். ஈச்வரன் தன் போக்த்ருத்வார்த்தமாக இவர்களுக்குக் கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உண்டாக்குகையால் இவை பரார்த்தங்கள்.

சேதனர்களின் செயல்பாடு என்பது ஈச்வரனின் ஸங்கல்பத்திற்கு ஏற்ப கர்மங்களை இயற்றியபடி இருப்பது, அந்தக் கர்மங்களின் பலன்களை அனுபவிப்பதும் ஆகும். இவ்விதம் அவர்கள் கர்மம் இயற்றுவதும், அவற்றின் பலனை அனுபவிப்பது ஈச்வரனின் ஸங்கல்பம் காரணமாகவே என்பதால், அவர்கள் அவனுக்காகவே உள்ளனர் அன்றி, தங்களுக்காக அல்ல.