Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்வம் – 1 – சித் அல்லது சேதனம் - ஜீவனின் ஸ்வரூபம்
மூலம் - ஆகையால் ஜீவஸ்வரூபத்தை ஞானத்வம், ஆனந்தத்வம், அமலத்வம், அணுத்வம் இத்யாதிகளான நிரூபக தர்மங்களையிட்டு நிரூபித்து ஞானம், ஆனந்தம், அமலம், அணு என்று இம்முகங்களாலே சொல்லக்கடவது.
ஆகவே ஜீவனின் ஸ்வரூபத்தை ஞானம், ஆனந்தம், அமலம் (தூய்மை), அணு ஆகிய தன்மைகள் கொண்டு உரைக்கலாம். அதாவது ஜீவன் ஞானமயமானவன், ஆனந்தமயமானவன், தூய்மையானவன், அணு போன்ற அளவினன் என்று கூறலாம்.