Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்வ த்ரய வேறுபாடுகள் குறித்த விளக்கம்
மூலம் - இவ் ஈசோசிதவ்ய ரூபமான தத்த்வத்ரயம் நிற்கும் நிலையை “ஸ்வாதீந த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று சுருங்க அருளிச் செய்தார். த்ரிவிதசேதனரென்றது பத்தரையும், முக்தரையும், நித்யரையும்; த்ரிவித அசேதனமென்றது த்ரிகுணத்ரவ்யத்தையும், காலத்தையும், சுத்தஸத்த்வமான த்ரவ்யத்தையும்.
இப்படியாக ஈச்வரனையும், அவனால் நியமிக்கப்படுபவற்றையும் நமது ஆசார்யர்கள் சுருக்கமாகப் பின்வருமாறு அரளிiச் செய்தனர் (எம்பெருமானாரின் ஸ்ரீவைகுண்ட கத்யம், ஆளவந்தாரின் ஆத்மஸித்தி) - ஸ்வாதீந த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் - மூன்று விதமான சேதனர்கள், மூன்று விதமான அசேதனங்கள் ஆகியவற்றின் தன்மை (ஸ்வரூபம்), இருப்பு (ஸ்திதி) மற்றும் செயல்பாடு (ப்ரவ்ருத்தி) என்னும் இவையும், அவற்றின் வேறுபாடுகளும் தன்னைச் சார்ந்து இருக்கும்படி உள்ளான் - என்றனர். த்ரிவித சேதனம் என்பது - பந்தத்தில் உள்ள பத்தர்கள், மோக்ஷம் பெற்ற முக்தர்கள், நித்யஸூரிகள் ஆகியவர்கள் ஆவர். த்ரிவித அசேதனம் என்பது - மூன்று குணங்கள், காலம், சுத்தஸத்வம் - என்பதாகும்.