Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்வ த்ரய வேறுபாடுகள் குறித்த விளக்கம்
மூலம் – “ஸர்வஜ்ஞ: ஸர்வக்ருத் ஸர்வம் சக்தி ஞான பலர்த்திமாந்”, “க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதிபிரஸம்யுத:” இத்யாதிகளாலே ஈச்வர ஸ்வபாவம் உபதிஷ்டமாயிற்று.
அடுத்து மூன்றாவது தத்துவமான ஈச்வர தத்துவம் விளக்கப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-1-47) - ஸர்வஜ்ஞ: ஸர்வக்ருத் ஸர்வம் சக்தி ஞான பலர்த்திமாந் - அனைத்தும் அவனே, அனைத்தும் அறிந்தவன், அனைத்து சக்தி, ஞானம், பலம், செல்வம் உள்ளவன் - என்றது. மேலும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-1-48) - க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதிபிரஸம்யுத: - அவன் களைப்பு, சோம்பல், பயம், கோபம், காமம் அற்றவன் - என்றது. இப்படியாக ஈச்வர ஸ்வபாவம் விளக்கப்பட்டது.