Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்வ த்ரய வேறுபாடுகள் குறித்த விளக்கம்
மூலம் – “புமாந் ந தேவோ ந நர:, நாயம் தேவோ ந மர்த்யோ வா, க்ஷரஸ்ஸர்வாணி பூதாநி கூடஸ்த: அக்ஷர உச்யதே, யத்வை பச்யந்தி ஸூரய:” இத்யாதிகளாலே த்ரிவித ஜீவர்களுடைய ப்ரகாரம் விவேகிக்கப்பட்டது.
ஜீவனைப் பற்றிக் கூறுகையில் ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-13-98) - புமாந் ந தேவோ ந நர: - மனிதனும் அல்லன், தேவனும் அல்லன் - என்றும், நாயம் தேவோ ந மர்த்யோ வா - தேவனும் அல்லன், மனிதனும் அல்லன் - என்றும் கூறப்பட்டது. ஜீவன்கள் மூன்று பிரிவில் அடங்குவர். முதல் இரண்டு பிரிவுகள் - பத்தர் மற்றும் முக்தர் ஆவர். இதனை கீதை (15-16) - க்ஷரஸ்ஸர்வாணி பூதாநி கூடஸ்த: அக்ஷர உச்யதே - கர்மத்திற்கு வசப்பட்ட அனைத்தும் க்ஷரம் என்பதாகும், கர்மவசப்படாமல் உள்ளவை முக்தாத்மா அல்லது கூடஸ்தம் என்பதாகும் - என்று கூறியது. மூன்றாவது பிரிவினரைப் பற்றி ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-6-39) - யத்வை பச்யந்தி ஸூரய - நித்யஸூரிகள் பார்த்தபடி உள்ள இடம் - என்று நித்யஸூரிகளைக் கூறியது. இப்படியாக ஜீவ தத்வத்தின் தன்மைகள் விளக்கப்பட்டன.