Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
ப்ரக்ருதி ஆத்மா ப்ராந்தி: களதி சித் அசித் லக்ஷண தியா ததா ஜீவ ஈச ஐக்ய ப்ரப்ருதி கலஹ: தத் விபஜனாத் அத: போக்தா போக்யம் தத் உபய நியந்தா நிகமை: விபக்தம் ந: தத்த்வத்ரயம் உபதிசந்தி அக்ஷததிய:
சேதன அசேதனங்களைப் பற்றிய அறிவு உண்டாகும்போது, ஆத்மா என்பது உடலும் இந்த்ரியங்களுமே என்றுள்ள மயக்கம் நீங்கிவிடும். ஜீவனும் ஈச்வரனும் ஒன்று என எண்ண வைக்கும் தவறான வாதங்கள், அந்த இரண்டின் (ஜீவன், ஈச்வரன்) தன்மைகள் உணரப்படும்போது மறைந்துவிடும். இத்தகைய தவறான எண்ணங்கள் நீங்கும்விதமாக, சாஸ்த்ரங்களiல் கூறப்பட்டுள்ள மூன்று தத்துவங்களை நமது ஆசார்யர்கள் நமக்கு உபதேசம் செய்கின்றனர். இவையாவன - சுகதுக்கங்களை அனுபவிப்பவன் சேதனன் (போக்தா), அவனால் அனுபவிக்கப்படுவது அசேதனம் (போக்யம்), இவை இரணடையும் நியமித்தபடி உள்ளவன் ஈச்வரன் (நியந்தா) - என்பதாகும்.