Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 20)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

ப்ராப்யம் ப்ரக்ஷ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித: ப்ராப்தி: தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத: ஸூரிவத் ஹந்த ஏநாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய: ஸேது: ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

நான் அடையவேண்டிய இலக்கு எதுவென்றால், மிகவும் உயர்ந்ததாகவும், அனைத்திற்கும் எஜமானனாகவும் உள்ள பரம்பொருளே ஆகும். அவனைச் சென்று அடையவேண்டிய நான், அவ்விதம் அடைவதற்கு ஏற்றவனே ஆவேன். தந்தையின் செல்வம் எவ்விதம் பிள்ளைக்கு வருகிறதோ அது போன்று, நித்யஸூரிகளுக்குக் கிட்டிய அந்த இலக்கு எனக்கும் தானாகவே கிட்டியிருக்கவேண்டும். அந்தோ. என்னுடைய அஹுங்காரத்தாலும், அதனால் ஏற்பட்ட அறியாமையாலும் நான் அந்த இலக்கை இழந்து நிற்கிறேன். ஆனால் அனைவருக்கும் சேஷிகளான திவ்யதம்பதிகளிடம் சரணாகதி செய்யும்போது, அந்த இலக்கு கிட்டிவிடும், ஆக சரணாகதி அந்த இலக்கை அடைவதற்கான உபாயமாக உள்ளது என்று தெரிந்துகொண்டேன்.