Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 19)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன் மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார் இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே
பரம்பொருள் இவன் மட்டுமே என்று உள்ளவனும், தாமரையில் உள்ள மஹாலக்ஷ்மியின் நாதனும் ஆகிய எம்பெருமான்; என்றும் எம்பெருமானை விரும்பி, அவனது திருவடிகளைச் சரணம் என்று பற்றி அவன் அருளை விரும்பி நிற்கின்ற ஜீவன்; இவ்விதம் எம்பெருமானை அடைய விரும்பும் ஜீவன் கைக்கொள்ள வேண்டிய உபாயம்; எம்பெருமானை அடைந்த பின்னர் பெறும் பலன்; எம்பெருமானை அடைவதற்குத் தடையாக உள்ள அறியாமை போன்ற வலிய வினைப்பயன்கள் - இப்படிப்பட்ட ஐந்து விஷயங்களையும், அனைத்தும் அறிந்த ஆசார்யர்கள், சிறிதும் ஐயம் இல்லாதபடி, நமது மனதில் இவை பற்றிய ஐயம் நீங்கும்விதமாக உபதேஸித்தனர்.