Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 18)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
மோக்ஷ தடைகள் பற்றி ரஹஸ்ய த்ரயத்தில் எங்கு உள்ளது
மூலம் - இவ்விரோதி வர்க்கத்தையெல்லாம் ரஹஸ்ய த்ரயத்தில் விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும் நமஸ்ஸுக்களில் மகாரங்களில் ஷஷ்டிகளாலும், ஸர்வபாப சப்தத்தாலும் அனுஸந்தித்து ஸம்ஸாரத்தில் அடிச்சூட்டாலே பேற்றுக்குறுப்பான வழிகளிலே த்வரிக்க ப்ராப்தம்.
இவ்விதம் மோக்ஷத் தடைக்கான விரோதிகள் பற்றி ரஹுஸ்யத்ரயத்தில் மறைமுகமாகக் கூறப்படும் கருத்துக்கள் கொண்டு எளிதாக உணரலாம். இதனை நம என்பதில் உள்ள மமகாரம் (நான், எனது) மூலமாகவும், சரமச்லோகத்தில் உள்ள ஸர்வபாபம் என்ற பதம் மூலமும் அறியலாம். இதனை இவ்விதம் அறிவதன் மூலம் ஒருவன் - நாம் ஸம்ஸாரம் என்ற மிகுந்த சூடான மணலில் நடந்தபடி உள்ளோம், மிகவும் விரைவாக இதனைக் கடந்து, மகிழ்வு அளிக்கக் கூடிய பாதையை அடைய வேண்டும் - என்று உணர்வான்.