Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 17)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
மோக்ஷத் தடைக்கு சரணாகதியே வழி
மூலம் - இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதி லங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷமாகிற ப்ரதான விரோதிக்குச் செய்யும் பரிஹாரத்தை “தஸ்ய ச வசீகரணம் தச்சரணாகதிரேவ” என்று கடவல்லியில் வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே ஸ்ரீபாஷ்யக்காரர் அருளிச்செய்தார்.
மோக்ஷம் அடைவதற்குத் தடையாக உள்ளவற்றில் முதன்மையாக உள்ளது பகவானின் ஆணைகளை மீறுவதால், அவன் அளிக்கும் தண்டனைகளே ஆகும். இதுவே சங்கிலி போன்றுள்ள தொடர்ச்சியான துன்பங்களின் அடிப்படைக் காரணமாகிறது. இதனை விலக்குவது எப்படி? இதனை பகவத் ராமானுஜர் கூறுகையில் - தஸ்ய ச வசீகரணம் தச்சரணாகதிரேவ - இந்தத் துன்பங்கள் நீங்க, எம்பெருமானை வசப்படுத்துவதே ஆகும், அதற்கான வழி, அவனைச் சரணாகதி அடைவதே ஆகும் - என்று மிகவும் தெளிவாகக் கூறினார். இதனை அவர், கட உபநிஷத்தில் புலன்கள், மனம் போன்றவற்றை அடக்கும் வரிசை கூறும் இடத்தை விளக்கும்போது கூறுகிறார்.