Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 14)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

அர்த்தபஞ்சகம் – 3, 4 – உபாயம் மற்றும் பலன்

மூலம் - ப்ராப்த்யுபாயமும் இதின் பரிகரங்களும் பலஸ்வரூபமிருக்கும்படியும் மேலே ப்ராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம். இவற்றில் உபாயம் திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும், அயந சப்தத்திலும், த்வயத்தில் பூர்வ கண்டத்திலும், சரமச்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் அநுஸந்தேயம். பலஸ்வரூபம் சதுர்த்யந்த பதங்களிலும், த்வயத்தில் நமஸ்ஸிலும், “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்கிறவிடத்திலும் அநுஸந்தேயம்.

(பரம்பொருளை) அடையும் உபாயம் பற்றியும், அவ்விதம் அடைந்த பின்னர் கிட்டும் பலன்கள் பற்றியும் நாம் பின்னால் பல இடங்களில் விவரித்துக் கூறுவோம். உபாயம் என்பது திருமந்த்ரத்தில் உள்ள நம என்ற பதம் மூலமும், நாராயணாய என்பதில் உள்ள அயந என்பதன் மூலமும் அறியக்கடவது. உபாயம் குறித்து த்வய மந்த்ரத்தின் முதல் வரியிலும், சரமச்லோகத்தின் இரண்டாவது வரியிலும் உணரலாம். பலன் பற்றி திருமந்த்ரத்தில் நாராயணனுக்கு என்று கூறும் நான்காம் வேற்றுமை மூலமும், த்வயத்தில் உள்ள நம என்ற பதம் மூலமும், சரமச்லோகத்தில் உள்ள “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாபங்களிலிருந்து நான் விடுவிக்கிறேன்” என்பதன் மூலமும் அறியலாம்.