Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
ரஹஸ்யத்ரயத்தில் ஜீவனின் ஸ்வரூபம் பற்றிக் கூறப்படுவது
மூலம் - இப்ராப்தாவினுடைய ஸ்வரூபம் ப்ரணவ நமஸ்ஸுக்களில் மகாரங்களிலும், நார சப்தங்களிலும், ப்ரபத்யே என்கிற உத்தமனிலும், வ்ரஜ என்கிற மத்யமனிலும், த்வா என்கிற பதத்திலும், மா சுச: என்கிற வாக்யத்திலும் அநுஸந்தேயம்.
ஜீவனின் ஸ்வரூபம் குறித்து அஷ்டாக்ஷரத்தில் “ஓம்” என்பதில் உள்ள “ம” என்ற எழுத்து மூலமும், “நம” என்ற பதம் மூலமும், நாராயணா என்பதில் உள்ள “நார” என்ற பதம் மூலமும் அறிவிக்கப்பட்டது, த்வயத்தில், “ப்ரபத்யே” என்ற பதம் மூலம் உணர்த்தப்பட்டது, சரமச்லோகத்தில், “வ்ரஜ” என்பதன் மூலமும், “த்வா” என்பதன் மூலமும், “மா சுச:” என்ற வரி மூலமும் அறிவுறுத்தப்பட்டது.