Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

அர்த்தபஞ்சகம் – 2 - ஜீவனின் ஸ்வரூபம்

மூலம் - இப்படி லக்ஷ்மீ ஸஹாயமாய், அபரிமித ஞானானந்தமாய், ஹேயப்ரத்யநீகமாய், ஞான சக்த்யாத்யநந்த மங்களகுண விசிஷ்டமாய், திவ்யமங்கள விக்ரஹோபேதமாய், சரீரபூத விபூதித்வய யுக்தமாய், ஜகத்ஸ்ருஷ்ட்யாதி வ்யாபார லீலமாய்க் கொண்டு ப்ராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் ப்ரத்யகாத்மாவினுடைய பத்த முக்த நித்ய-ஸாதாரண ரூபமும் உபாயாதிகாரியான தனக்கு இப்போது அஸாதாரணமான ரூபமுமறிய வேணும்.

இவ்விதம் அடையவேண்டிய பொருளான (ப்ராப்யம்) எம்பெருமான் மஹாலக்ஷ்மியுடன் எப்போதும் இணைந்தவனாக உள்ளான். அவன் எல்லையற்ற ஞானம், எல்லையற்ற ஆனந்தம் கொண்டவனாக உள்ளான். தாழ்வுகள் அனைத்திற்கும் எதிர்தட்டாக உள்ளான். ஞானம், சக்தி, ஆனந்தம் போன்ற மங்கள குணங்களை அளவற்று உடையவனாக உள்ளான். திவ்யமங்கள விக்ரஹம் கொண்டவனாக உள்ளான். தன்னுடைய சரீரமாக நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளான். தன்னுடைய பொழுதுபோக்கிற்காக உலகில் உள்ள அனைத்தையும் படைத்தும், காத்தும், நிர்வகித்தும் வருகிறான். இப்படிப்பட்ட ப்ரஹ்மமான எம்பெருமானை அடைய எண்ணும் ஜீவன், “பத்தர், முக்தர், நித்யர்” ஆகிய மூன்று ஜீவன்களைப் பற்றி அறியவேண்டும். தனக்கு உள்ள வேறுபாட்டினை அறியவேண்டும்.