Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
ஈச்வரனின் விபூதிகள்
மூலம் – “விஷ்ணோரேதா விபூதய:”, “மஹாவிபூதி ஸம்ஸ்தாந”, “நாந்த: அஸ்தி மம திவ்யாநாம் விபூதிநாம் பரந்தப” இத்யாதிகளுடைய ஸங்க்ரஹமான “யதண்டமண்டாந்தர கோசரம் ச யத்” என்கிற ச்லோகத்தின்படியே அநந்த விபூதி விசிஷ்டமாக அநுஸந்தேயம்.
அவனது விபூதிகள் மிகவும் சிறப்புடையவை, எல்லையற்றவை என்பதை ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-22-32) - விஷ்ணோரேதா விபூதய: - இவை அனைத்தும் விஷ்ணுவின் விபூதிகள்; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-1-50) - மஹாவிபூதி ஸம்ஸ்தாந - மஹாவிபூதி எனப்படும் பெரிய விபூதியைத் தனது இருப்பிடமாக உள்ளவன்; கீதை (10-40) - நாந்த: அஸ்தி மம திவ்யாநாம் விபூதிநாம் பரந்தப – அர்ஜுனா! எனது மேன்மையான விபூதிகளுக்கு எல்லையில்லை – என்பவற்றின் மூலம் உணரலாம். இவை அனைத்தின் சுருக்கமாகவே ஸ்தோத்ரரத்னம் (17) - யதண்டமண்டாந்தர கோசரம் ச யத் - அண்டம் என்னும் இப்ப்ரபஞ்சமும், இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் அவனது விபூதிகள் – என்னும் ச்லோகம் உள்ளது.