Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
ஈச்வரன் தாழ்ந்த குணங்கள் அற்றவன்
மூலம் – இப்படி “ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம்”, “பர: பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ்ஸந்தி பராவரேசே” என்கிறபடியே ஹேய ப்ரத்யநீகமாக அநுஸந்தேயம்.
எம்பெருமான் தாழ்வுகள் அனைத்திற்கும் எதிர்தட்டாக உள்ளான் என்பதை ஸ்ரீவிஷ்ணு புராணம் (1-22-53) - ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம் - விஷ்ணு என்ற திருநாமம் கொண்ட எம்பெருமானின் ஸ்வரூபம் தோஷங்கள் அற்றது – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-85) - பர: பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ்ஸந்தி பராவரேசே - அவன் உயர்ந்தவற்றை விட உயர்ந்தவன், அவனிடம் க்லேசம் முதலான தோஷங்கள் ஏதும் இல்லை – என்றும் உள்ள வாக்கியங்களால் அறியலாம்.