Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
அர்த்தபஞ்சகம் – 1 - ஈச்வரனின் ஸ்வரூபம்
மூலம் - இவற்றில் ப்ராப்யமான ப்ரக்ஷ்மத்தினுடைய ஸ்வரூபம் : திருமந்த்ரத்தில் ப்ரதம அக்ஷரத்திலும் நாராயண சப்தத்திலும், த்வயத்தில் ஸவிசேஷணங்களான நாராயண சப்தங்களிலும், சரமச்லோகத்தில் மாம், அஹம் என்கிற பதங்களிலும் அநுஸந்தேயம்.
இவற்றில் (அர்த்தபஞ்சகத்தில்) அடையப்பட வேண்டிய இலக்கான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் என்பது திருமந்த்ரத்தின் முதல் சொல்லான ஓம் என்பதில் உள்ள “அ” என்பதன் மூலமும், நாராயண என்ற பதம் மூலமும் அறியப்படுகிறது; த்வய மந்த்ரத்தில் உள்ள “ஸ்ரீமந்” என்ற அடைச்சொல்லுடன் கூடிய “நாராயண” என்ற பதம் மூலம் அறியப்படுகிறது; சரமச்லோகத்தில் உள்ள “நான், என்” என்ற பதங்கள் மூலம் அறியப்படுகிறது.