Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

அர்த்தபஞ்சகத்தின் விளக்கம்

மூலம் - இஸ்ஸம்பந்தம்போலே முமுக்ஷுவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாகச் சேர்த்த அர்த்தபஞ்சகம் ஏதென்னில், “ப்ராப்யஸ்ய ப்ரக்ஷ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந: | ப்ராப்த்யுபாய பலம் ச ஏவ ததா ப்ராப்தி விரோதி ச | வதந்தி ஸகலா வேதா: ஸ இதிஹாஸ புராணகா:” என்று சொல்லப்பட்டன.

– ஈச்வரன் மற்றும் ஜீவன் என்னும் தொடர்புடன் சேர்த்து, முமுக்ஷுக்கள் அறியவேண்டிய ஐந்து முக்கியமான கருத்துக்கள் என்னவென்பதை ஹாரீத ஸம்ஹிதை - ப்ராப்யஸ்ய ப்ரக்ஷ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந: | ப்ராப்த்யுபாய பலம் ச ஏவ ததா ப்ராப்தி விரோதி ச | வதந்தி ஸகலா வேதா: ஸ இதிஹாஸ புராணகா: - அடையப்பட வேண்டிய ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம், அந்த ப்ரஹ்மத்தை அடையும் ஜீவனின் ஸ்வரூபம், இவ்விதம் ப்ரஹ்மத்தைச் சென்றடையும் உபாயம், ப்ரஹ்மத்தை அடைவதன் மூலம் பெறும் பயன் மற்றும் ப்ரஹ்மத்தை அடைவதற்குத் தடையாக உள்ள விஷயங்கள் என்பவையே ஆகும், இப்படியாகவே இதிஹாஸங்கள், புராணங்கள் ஆகியவற்றுடன் கூடிய வேதங்கள் கூறுகின்றன - என்று கூறியது.