Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

ஐந்து அல்லது ஆறு அர்த்தங்களில் வேறுபாடு இல்லை

மூலம் - ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும், ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்த விசேஷத்தை ஸித்தாந்தத்துக்கு தளமாக்கி இத்தை அநுபந்தித்திருக்கும் அர்த்தபஞ்சகத்தைச் சிலர் விசாரித்தார்கள். இஸ்ஸம்பந்தத்தோடே கூட ஷடர்த்தங்களென்று சிலர் அநுஸந்தித்தார்கள்.

நாராயண மற்றும் ஓம் ஆகிய பதங்களின் மூலம், ஈச்வரனுக்கும் ஜீவனுக்கும் இடையே உள்ள உறவுமுறை என்பது, ஆத்மாவிற்கும் சரீரத்திற்கும் உள்ளது போன்றது என்பது விளக்கப்பட்டது. இந்தத் தத்துவத்தையே நமது விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தின் அடிப்படை என்று கருதுபவர்கள், முமுக்ஷுவால் அறியப்படவேண்டியது அர்த்தபஞ்சகமே ஆகும் என்று கருதி, அதனை ஆராய்ந்தனர். வேறு சிலர், அர்த்தபஞ்சகத்துடன், இந்த உறவுமுறையும் (ஈச்வரன்-ஜீவன்) அறியப்படவேண்டும் என்று கருதி, ஆறு அர்த்தங்களை ஆராய்ந்தனர்.