Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
ஆதௌ ப்ராப்யம் பரமம் அநகம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதௌ இஷ்ட உபாயம் து அயந நமஸோ: ஈப்ஸிதார்த்தம் சதுர்த்யாம் தத் வ்யாகாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மநும் தம் தத் ப்ராயம் ச த்வயம் அபி விதந் ஸம்மத: ஸர்வவேதீ
ப்ரணவத்திலும் (ஓம்), அஷ்டாக்ஷரத்திலும் (நாராயண) உள்ள “அ” என்பதன் மூலம், தோஷம் இல்லாததும் மிகவும் உயர்ந்ததும் அடையப்படவேண்டிய பொருளாக உள்ளதும் ஆகிய வஸ்து (பகவான்) கூறப்பட்டது. அடுத்துள்ள “ம” என்பதன் மூலம், இப்படிப்பட்ட வஸ்துவை அடையவேண்டிய ஜீவனின் ஸ்வரூபம் கூறப்பட்டது. (நாராயணாய என்பதில் உள்ள) அயநம் என்பதன் மூலம், இப்படிப்பட்ட வஸ்துவை அடையும் உபாயமான ஸித்த உபாயம் கூறப்பட்டது. “நம” என்பதன் மூலம் இப்படிப்பட்ட உபாயத்திற்குத் தேவையான அங்கமான சரணாகதி (ஸாத்ய உபாயம்) கூறப்பட்டது. நாராயணாய என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை (நான்காம் வேற்றுமை என்பது யார் ஒருவருக்காக ஒன்றைக் கூறுகிறோமோ என்று பொருள்; உதாரணமாக உழவன் மாடுகளுக்கு நீர் அளிக்கிறான்) மூலம், அடையவேண்டும் என்று ஆசைப்படும் பொருள் கூறப்பட்டது. நம என்பதில் உள்ள “ம” என்ற பதம், இப்படிப்பட்ட பகவானை அடையத் தடையாக உள்ள மமகாரத்தை (என்னுடையது, நான் போன்றவை) குறிக்கும். இப்படியாக ஐந்து கருத்துக்களை விளக்கும் அஷ்டாக்ஷரத்தையும், அது போன்று உள்ள த்வயம் (மற்றும் சரம ச்லோகம்) ஆகியவற்றையும் அறிபவன், அனைத்தையும் அறிந்தவனாகிறான்.