Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 14)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

யதி ஏதம் யதி ஸார்வபௌம கதிதம் வித்யாத் அவித்யாதம: ப்ரத்யூஷம் ப்ரதிதந்த்ரம் அந்திமயுகே கச்சித் விபச்சித்தம: தத்ர ஏகத்ர ஞாடிதி உபைதி விலயம் தத் தந்மத ஸ்தாபனா ஹோவாக ப்ரதமாந ஹைதுககதா கல்லோல கோலாஹல:

யதிகளின் தலைவரான எம்பெருமானாரால் அருளிச் செய்யப்பட்டதும், அறியாமை என்ற இருளை நீக்குவதும் ஆகிய இந்த கருத்துக்களை (ஈச்வரனுக்கும் உலகில் உள்ள அனைத்திற்கும் இருக்கும் உறவு என்பது ஆத்மாவிற்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவு போன்றது என்ற கருத்து), இந்தக் கலியுகத்தில் ஒருவன் அறிந்து கொள்கிறான் என்று வைப்போம். அப்படிப்பட்டவன் உள்ள இடத்தில், மற்ற மதங்களை நிலை நிறுத்த வாதம் செய்பவர்கள் உண்டாக்கும் அலைகளின் இரைச்சல் போன்ற ஓசை, ஒலிக்காமல் அடங்கி விடுகின்றன.