Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 13)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய் இலது ஒன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த் துலை ஒன்று இலையென நின்ற துழாய்முடியான் உடம்பாய் விலை இன்றி நாம் அடியோம் என்று வேதியர் மெய்ப்பொருளே

அவனே நமது இருப்பிற்கும் ஆதாரத்திற்குமாக உள்ளான். நம்மை நியமிப்பவனாக அவனே உள்ளான். அனைத்திற்கும் ஈச்வரனாய் உள்ளான். அவனுக்குத் தொண்டு புரியாமல் ஏதும் இங்கு இல்லை என்னும்படி உள்ளான். அனைத்தும் அவனுக்காக என்னும்படியான ஸ்வாமியாக உள்ளான். தனக்குச் சமமாக வேறு எந்த ஒன்றும் இல்லாதவனாக உள்ளான். இப்படிப்பட்டவனும், துளசிமாலையைத் தனது திருமுடியில் சூடியுள்ளவனும் ஆகிய நாராயணனுக்கு நாம் உடம்பாகவும், வேறு பயன் கருதாத அடிமைகளாகவும் உள்ளோம் - என்று வேதம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.