Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்
ஈச்வரன் அனைத்தையும் தாங்குதல் மற்றும் நியமித்தல் குறித்த விளக்கம்
மூலம் - ஸர்வ வஸ்துக்களுடையவும் ஸத்தை ஸங்கல்பாதீநையாகையாவது அநித்யங்கள் அநித்யேச்சையாலே உத்பந்நங்களாயும், நித்யங்கள் நித்யேச்சாஸித்தங்களாயுமிருக்கை. இவ்வர்த்தத்தை “இச்சாத ஏவ தவ விச்வ பதார்த்த ஸத்தா” என்கிற ச்லோகத்தாலே அபியுக்தர் விவேகித்தார்கள். இத்தாலே ஸர்வத்தினுடையவும் ஸத்தாநுவ்ருத்தி ரூபையான ஸ்திதியும் ஈச்வரேச்சாதீநையானபடியாலே ஸர்வமும் ஈச்வர ஸங்கல்பாச்ரிதம் என்று சொல்லுகிறது.
– சேதன அசேதனங்கள் இருப்பது என்பதே அவனது ஸங்கல்பத்தினால் ஆகும். ஒரு சிலர் ஒரு சில காலகட்டத்தில் மட்டுமே இருப்பது என்பது அவனுக்கு அவ்வப்போது உண்டாகும் ஸங்கல்பத்தினாலும், எப்போதும் இருந்து வரும் பொருள்கள் அனைத்தும் அவனது நித்யமான ஸங்கல்பத்தினாலும் உள்ளன. இதனை, அனைத்தும் அறிந்த அறிவாளிகள், ஸ்ரீவைகுண்டஸ்தவம் (36) - இச்சாத ஏவ தவ விச்வபதார்த்தஸத்தா - உனது ஸங்கல்பத்தினால் மட்டுமே அனைத்தும் உள்ளன - என்ற வரி மூலமாக அறிகின்றனர். ஆக ஒரு பொருள் தொடர்ந்து இருக்கை என்பது ஈச்வரனின் ஸங்கல்பத்தாலேயே ஆகும். எனவே அனைத்தும் ஈச்வரனின் ஸங்கல்பத்தைச் சார்ந்தே உள்ளன என்றாகிறது.