Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

சரீரம் என்றால் என்ன, சரீரீ என்றால் என்ன

மூலம் - இதில் ஈச்வரனுக்கு சரீரத்வமாவது, சேதநாசேதந த்ரவ்யங்களைப் பற்ற நியமேந தாரகனுமாய், நியந்தாவுமாய், சேஷியாயுமிருக்கை. சேதநாசேதநங்களுக்கு சரீரத்வமாவது, நியமேந ஈச்வரனைப் பற்ற தார்யமுமாய், நியாம்யமுமாய், சேஷமுமான த்ரவ்யமாய் இருக்கை.

ஈச்வரனே சரீரீ (ஆத்மா) எனப்படுகிறான். இவ்விதம் கூறும் காரணம் என்ன? சேதந அசேதநங்கள் (த்ரவ்யம்) உள்ளவரையில் அவற்றைத் தாங்குபவனாகவும் (தாரகன்), அவைகளை நியமிப்பவனாகவும், அவற்றின் எஜமானனாகவும் இவனே உள்ளான். சேதந அசேதநங்கள் அவனுடைய சரீரமாக இருக்கும் காரணம் என்ன? அவனால் தாங்கப்பட்டு உள்ளன, அவனால் நியமிக்கப்பட்டு உள்ளன, தங்கள் வாழ்நாள் முழுவதும் எஜமானனாகிய அவனுக்காகவே உள்ளன.