Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்
அனைத்து அவனுடைய சரீரம், அவனே அனைத்தின் ஆத்மா என்பதே முக்கியமானது
மூலம் – ப்ரதிதந்த்ரமாவது, மற்றுள்ள ஸித்தாந்திகள் ஒருவரும் இசையாதே தன்னுடைய ஸித்தாந்தத்துக்கே அஸாதாரணமான அர்த்தம். இங்கு வேதாந்திகளான நம்முடைய தர்சனத்துக்கே அஸாதாரணமுமாய் ப்ரதானமுமான அர்த்தம் ஏதென்னில், சேதநாசேதநங்களுக்கும் ஈச்வரனுக்குமுண்டான சரீராத்மபாவ ஸம்பந்தாதிகள்.
ப்ரதிதந்த்ரம் என்றால், மற்றவர்களின் ஸித்தாந்தங்களில் காணப்படாதது, ஒரு குறிப்பிட்ட ஸித்தாந்தத்தில் மட்டுமே காணப்படுவது என்று பொருள். வேதாந்தவாதிகளான நமது ஸித்தாந்தத்திற்கு உள்ள தனித்தன்மை எது? இந்தத் தன்மையானது, சேதந அசேதநங்களுக்கும் ஸர்வேச்வரனுக்கும் இடையே உள்ள “சரீரம் – ஆத்மா” என்னும் தொடர்பு ஆகும்.