Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

ஆதேயத்வ ப்ரப்ருதி நியமை: ஆதிகர்த்து: சரீரம் ஸத்தா ஸ்தேம ப்ரயதந பலேஷு ஏதத் ஆயத்தம் ஏதத் விச்வம் பச்யந் இதி பகவதி வ்யாபக ஆதர்ச த்ருஷ்டே கம்பீராணாம் அக்ருதககிராம் காஹதே சித்த வ்ருத்தம்

வ்யாபக மந்த்ரங்கள் (இவை மூன்றாகும் - முதலாவது அஷ்டாக்ஷரம் – ஓம் நமோ நாராயணாய, இரண்டாவது ஷடாக்ஷரம் - ஓம் நமோ விஷ்ணவே, மூன்றாவது த்வாதசாக்ஷரம் - ஓம் நமோ பகவதே வாஸுதேவாய) என்னும் கண்ணாடி மூலம் பகவானைக் காணும்போது, அவை, அவன் எங்கும் பரவி உள்ளதைக் காண்பிக்கின்றன. மேலும் இந்த உலகம் முழுவதும் அவனையே சார்ந்து உள்ளதையும், அவனாலேயே நீடித்திருப்பதையும், தனது செயல்களுக்கும் செயல்களின் பலன்களுக்கும் அவனையே அண்டியுள்ளதையும் காணமுடியும். இந்த உலகம் அவனது லீலைக்காகவே உள்ளதாலும், அவனால் நியமிக்கப்பட்டு வருவதாலும், அவனது சரீரமாகவே இந்த உலகம் உள்ளது என்று அறியலாம். இவ்விதம் இந்த உலகமானது அவனது சரீரமாக உள்ளது என்ற உண்மையை அறியும் ஒருவன், யாராலும் உருவாக்கப்படாத ச்ருதிகளை முழுவதுமாக அறிந்தவன் ஆகிறான்.