Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்

சாகாநாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மக: ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந் வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித: ஸாரஜ்ஞோ யதி கச்சித் அஸ்தி புவநே நாத: ஸயூதஸ்ய ந:

வேதங்களின் மேல் பாகமான உபநிஷத்துக்களில், மூல மந்த்ரமான அஷ்டாக்ஷரம் ப்ரகாசிக்கிறது. விவேகம் கொண்ட ஒருவன் இந்த அஷ்டாக்ஷரம் மூலமாகத் தனது உண்மையான தன்மையை அறிந்தாலோ, தனது வாழ்நாள் முழுவதும் த்வய மந்த்ரத்தைக் கூறியபடி இருந்தாலோ, ஒருமுறை மட்டுமே கூறினாலும் வாழ்வின் மிக உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கவல்ல த்வயத்தைக் இவ்விதம் கூறினாலும், தனது லீலைக்காகவே தேரோட்டியாக நின்றவனும், வேதங்கள் அனைத்திற்கும் மகுடம் போன்றவனும் ஆகிய கண்ணன் தனது கருணை காரணமாக உபதேசித்த சரமச்லோகத்தின் மீது மஹாவிச்வாசம் உள்ளவனும் ஆகிய ஒருவன், நமது கூட்டம் அனைத்திற்கும் ஸ்வாமி போன்றவன் ஆவான்.