Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில் சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய - நம் சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே

இதுவரை கற்றது போதாது என்று ஆசையால் நாம் மேலும் 18 பிரிவுகளை கற்கக் கூடும் (18 பிரிவுகள் = 4 வேதங்கள், சிக்ஷை, வ்யாகரணம், ஸந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம், மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்மம், ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தர்வம் மற்றும் அர்த்த சாஸ்த்ரம்). இவை வெறும் எண்ணிக்கை மட்டும் அன்றி, நமக்குச் சுமையாகவும் ஆகிவிடும். ஆகவே, இமைக்காத கண்களை உடையவர்களும் சிறந்த ஞானம் உள்ளவர்களும் ஆகிய நித்யஸூரிகள் துதிக்கும் அஷ்டாக்ஷரத்தையும், மற்ற இரண்டையும் (த்வயம், சரமச்லோகம்) நமது ஆசார்யர்கள் நமக்கு அளித்தனர்.