Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்

சாஸ்த்ரங்களே மோக்ஷத்திற்குப் ப்ரமாணம்

அஸரம் அல்பஸாரம் ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் பஜேத் ஸாரதமம் சாஸ்த்ரே (ஸ்த்ரம்) ரத்னாகர இவாம்ருதம்

– பயன் எதுவும் இல்லாதவற்றையும், அற்பமான பயன் அளிப்பவற்றையும், சிறிது பலன் அளிப்பவற்றையும், சற்றே அதிக பலன் அளிப்பவற்றையும் துறக்க வேண்டும். சாஸ்த்ரங்களில் அம்ருதம் போன்ற மிக உயர்ந்த கருத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.