Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 2.ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்
ச்ருதி பத விபரீதம் க்ஷ்வேள கல்பம் ச்ருதை ச ப்ரக்ருதி புருஷ போக ப்ராபக அம்ச: ந பத்ய: தத் இஹ விபுத குப்தம் ம்ருத்யுபீதா விசிந்வந்தி உபநிஷத் அம்ருத அப்தே: உத்தமம் ஸாரமார்யா:
வேத மார்க்கத்திற்கு மாறாகப் பொருள் உரைக்கும் அனைத்து மதங்களுமே விஷத்திற்குச் சமம் ஆகும். வேதங்களில் கூட, இந்த உலக விஷயங்களை அடையும் பொருட்டும், தனது ஆத்மாவையே அனுபவிக்கும் (கைவல்யம்) பொருட்டும் கூறப்படும் பகுதிகள் அனைத்தும் உயர்ந்தவை அல்ல. ஆகவே, ஸம்ஸாரம் என்னும் பிறப்பு மற்றும் இறப்பைக் கண்டு அச்சம் கொள்ளும் அறிவாளிகள், உபநிஷத்துகள் என்ற கடலைக் கடைந்து எழும் ஸாரம் (ரஹஸ்ய த்ரயம் = திருமந்த்ரம், சரமச்லோகம், த்வயம்) என்ற அமிர்தத்தையே பருக விரும்புவர். இந்த அமிர்தத்தை, நமது ஆசார்யர்கள், நமது நன்மைக்காக மிகுந்த பாடுபட்டு காப்பாற்றி வருகின்றனர்.