Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 16)

அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்

கர்ம அவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷம் இஹ அநாதி சித்ர ப்ரவாஹ தத் தத் காலே விபக்திர் பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா தத் லப்த ஸ்வாவகாச ப்ரதமகுரு க்ருபா ம்ருஹ்யமாண: கதாசித் முக்த ஐச்வர்யந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

இந்த உலகில், ஸம்ஸாரத்தில் சிக்கிய ஒவ்வொரு ஜீவனுக்கும், கர்மம் மற்றும் அறியாமை போன்ற வினைகள் சக்கரம் போன்று மீண்டும் மீண்டும் தொடர்ந்தபடி இருக்கும். எண்ணற்ற ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கும். பல ஸித்தாந்தங்கள் கூறுவது என்னவெனில்: சரியான காலம் வரும்போது, பூர்வ கர்மங்கள் பலன் அளிக்கும் என்பதாகும். இப்படிப் பலன் அளிக்கும் காலம் வரும்போது, முதல் ஆசார்யனான பகவான், அந்த ஜீவனைப் பிடித்து, தனது கருணையை அவன் மீது பொழிகிறான். ஆனால் இப்படிப்பட்ட ஜீவன்கள் மிகவும் குறைவே ஆகும். அவர்கள் ஐச்வர்யத்திற்கு இருப்பிடமாக மாறுகின்றனர். இவர்கள் பெற்ற பேறானது, நித்யஸூரிகள் பெறும் கைங்கர்யம் போன்றதாகும்.