Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம் மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம் கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே
நாம் மஹாவிஷ்ணுவின் திருமார்பில் உள்ளதும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது மஹாலக்ஷ்மியுடன் வெளிப்பட்டதும் ஆகிய கௌஸ்துபம் போன்று அவன் திருமார்பில் இருக்கும் தகுதி உடையவர்களே ஆவோம். மேலும் தாமரை போன்ற அவனது திருவடிகளை நமது தலையில் க்ரீடம் போன்று அணிந்து கொள்ளும் தகுதியும் உள்ளவர்கள் ஆவோம். இத்தகைய தகுதி உள்ள நாம், நமது கர்மங்கள் என்ற வெள்ளத்தில், தாயின் கர்ப்பத்தில் உள்ளபோதே விழுந்து விடுகிறோம். ஆனால் நாம் அந்த வெள்ளத்தில் அடித்து சென்று விடாமல், அர்த்தபஞ்சகம் என்ற ஞானம் பெற்ற ஆசார்யர்கள் நம்மைக் காக்கவே அவதரித்தனர்.