Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
ராஜகுமார உதாரணம்
மூலம் - இவனுடைய அடியுடைமையையும் சில தார்மிகரடியாக வந்த யோக்யதையும் அளவுடைமையையும் நேராகக் கண்டு பரமகாருணிகனான பரம சேஷியாலே ப்ரேரிதராய்த் தாங்களும் காருணிகோத்தமராயிருப்பார் சில தேசிகர், “ஈச்வரஸ்ய ச ஸெளஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா | விஷ்ணோ: கடாக்ஷம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை: || ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்தி ஹேதவ:” என்கிறபடியே நேர்பட்டு.
அந்த ராஜகுமாரன் நன்மையின் இருப்பிடமாக மாறியுள்ளதையும், அவனுக்குச் சில நல்லோர்கள் செய்த நன்மைகளையும், அவனது அறிவையும், கருணையே வடிவமான பரம்பொருளால் தூண்டப்பட்ட சில ஆசார்யர்கள் காண்கின்றனர். இவர்கள் பரம்பொருளைப் போன்றே கருணை உள்ளவர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட ஆசார்யர்களின் தொடர்பு எவ்விதம் ஏற்படும் என்றால், “ஈச்வரஸ்ய ச ஸெளஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா | விஷ்ணோ: கடாக்ஷம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை: || ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: - பகவானின் அன்பு, புண்ணிய கர்ம பலன், பகவானின் கருணைப் பார்வை, எம்பெருமானிடம் வெறுப்பு இல்லாமை, எம்பெருமானைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், நல்லவர்களுடன்(ஸத்வ குணம் உள்ளவர்களுடன்) உரையாடுதல் ஆகிய ஆறும் ஒருவனை நல்லதோர் ஆசார்யனிடம் கொண்டு சேர்க்கும் காரணங்களாகும்”, என்பதன் மூலம் ஆகும்.