Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
ராஜகுமார உதாரணம்
மூலம் - ஒரு ராஜா அந்தப்புரத்துடனே வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே ஸக்தனான அளவிலே வார்த்தை அறிவதற்கு முன்பே வழி தப்பின ராஜகுமாரன் எடுத்தார்கையிற் பிள்ளையாய் ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர, அவன் தனக்கில்லாத சபரத்வாதிஜாதிகளை ஏறிட்டுக் கொண்டு,
ஒரு நாட்டின் ராஜா, தனது அந்தப்புர நாயகிகளுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். அவன் தனது வேட்டையில் ஆழ்ந்து, தன்னையே மறந்தான். அந்த ராஜாவின் புத்ரனான ராஜகுமாரன், தான் யார் என்பதே அறியாமல், சொற்கள் கூடப் பேசத் தெரியாத பருவத்தில் உள்ளவன் ஆவான். அந்த ராஜகுமாரன் தனது வழியைத் தவறவிட்டான். வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த அவனை, அந்தக் காட்டிலுள்ள வேடர்கள் அழைத்துக் கொண்டுபோய், தங்கள் இருப்பிடத்தில் வளர்த்து வந்தனர். அவனும் அங்கு (அவனுடைய அரசபிறவிக்கு) தனக்கு ஏற்காத வேடுவ வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.