Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்

கைங்கர்யம் செய்வதற்கான ஜீவனின் தகுதிகள்

மூலம் - இவன் தனக்கு வகுத்த சேஷியாய், அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், உயர்வற உயர்நலம் உடையவனாய், நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனாய், ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன்

இந்த ஜீவனுக்கு எஜமானனாகவும், அறியாமை என்ற இருள் சூழாமல் உள்ள நித்யசூரிகளின் அதிபதியாகவும், தன்னைக்காட்டிலும் உயந்தவை என்று ஏதும் இல்லாத கல்யாண குணங்கள் கொண்டவனாகவும், தனது திருமார்பில் வீற்றிருப்பவளான தாமரையில் பொருந்திய மஹாலக்ஷ்மியை எந்த அளவு விரும்புகிறானோ அந்த அளவிற்கு நம்மையும் விரும்புபவனாகவும், இந்த உலகில் உள்ளவர்கள் மற்றும் அந்த உலகில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்கும் நாதனாகவும் ஸர்வேச்வரன் உள்ளான்.