Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
கைங்கர்யம் செய்வதற்கான ஜீவனின் தகுதிகள்
மூலம் - ஸ்ரீய:பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீகௌஸ்துப ஸ்தானீயனாய்க் கொண்டு ஹ்ருதயங்கமனாய் குமாரனென்றும், புத்ரனென்றும், சிஷ்யனென்றும், ப்ரேஷ்யனென்றும், சேஷபூதனென்றும், தாஸபூதனென்றும், அவ்வோ சாஸ்த்ரங்களிலே ப்ரதிபன்னனாயிருக்கும் ஜீவாத்மா.
ஜீவாத்மா, பரம்பொருளுக்கு அவனுடைய கௌஸ்துபமணி போன்று மிகவும் ப்ரியமானவன் என்று பல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஜீவாத்மா பரம்பொருளின் இளவரசன் என்றும், புத்திரன் என்றும், சிஷ்யன் என்றும், வேலையாள் என்றும், அவனுக்காக மட்டுமே உள்ளவன் என்றும், அடிமை என்றும் கூறப்பட்டான்.