Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
மணிவர இவ சௌரே: நித்யஹ்ருத்ய: அபி ஜீவ: கலுஷமதி: அவிந்தந் கிங்கரத்வ ஆதிராஜ்யம் விதி பரிணதி பேதாத் வீக்ஷித: தேந காலே குருபரிஷத் உபஜ்ஞாம் ப்ராப்ய கோபாயதி ஸ்வம்
எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியமான கௌஸ்துபமணி போன்று, ஜீவனும் எம்பெருமானுக்கு மிகவும் பிரியமானவனே ஆவான். ஆனால், தனது அறியாமையால் அவனது புத்தி கலங்கி, பரம்பொருளுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யத்தை கைவிடுகிறான். ஆயினும் அவன், ஒரு காலகட்டத்தில், எம்பெருமானின் கடாக்ஷத்தின் மூலம், அந்த ஜீவன் தனது ஸ்வரூபம் பற்றிய ஞானம் (தான் அவனுக்கு அடிமை, அவனுக்காக மட்டுமே உள்ளேன் என்ற அறிவு) பெற்றுவிடுகிறான். இந்த நிலை அந்த ஜீவனுக்கு, அவனது ஆசார்யர்களின் உபதேசங்களால் கிட்டுகிறது. இதனால் அவன் தன்னைக் காத்துக் கொள்கிறான்.