Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்
கர்மம் ப்ரஹ்ம ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகாந் வந்தே ஹஸ்திகிரி ஈசஸ்ய வீதீசோதக கிங்கராந்
– கர்மகாண்டம் மற்றும் ஞானகாண்டம் என்ற இரு பகுதிகளை உடைய வேதசாஸ்திரங்களின் விஷயத்தில் ஒரு சிலர், “ஏன், எதற்கு” என்று வாதம் செய்து வந்தனர். இவர்களை வென்ற அப்புளாரை வணங்குகிறேன். இதன் மூலம் இவர், ஹஸ்திகிரியின் நாதனான ஈச்வரனை அடையும் தெருவை (மார்க்கத்தை) தூய்மைப்படுத்தினார்.