Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 1.உபோத்காத அதிகாரம்

ஆபகவத்த: ப்ரதிதாம் அநத்யாம் ஆசார்ய ஸந்ததிம் மநஸி மம யத் ப்ரஸாதாத் வஸதி ரஹஸ்ய த்ரயஸ்ய ஸார: அயம்

எந்தவிதமான தோஷங்கள் அற்றதும், மிகவும் ப்ரஸித்தமானதும், பகவான் வரை நீடித்துள்ளதும் ஆகிய குரு பரம்பரையை நான் வணங்குகிறேன். அவர்கள் அருளால் என் மனதில், மூன்று ரஹஸ்யங்களின் (திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ச்லோகம்) உட்கருத்துக்கள் எப்போதும் நிலைத்திருக்கின்றன.