Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 17)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுது எழுவோம் நமக்கு ஆர் நிகர் நானிலத்தே

திருச்சின்னம் மற்றும் சங்கு போன்ற தூய்மையான குரல் உடைய கீழகத்தாழ்வான் மற்றும் மேலகத்தாழ்வான் ஆகிய இருவரும் நாதமுனிகளின் சீடர்கள் ஆவர். சிறந்த பத்தியுடன் தன்னை வணங்கி நின்ற இவர்கள் இருவருக்கும் தாளம் மற்றும் கீதங்களை நாதமுனிகள் உபதேசித்தார். இதன் மூலம் அவர்கள் பல்லாண்டு காலம் மறைந்திருந்த நம்மாழ்வாரின் இனிமையான திருவாய்மொழியை பாடும் விதத்தை உபதேசித்தார். பக்தி மற்றும் பரபக்தி என்னும் பாதையில் இந்த உலகத்தை இயங்கவைத்தார். இப்படிப்பட்ட நாதமுனிகளின் திருவடிகளை நாம் என்றும் பணிவோம். இதனால் நான்கு திசைகளிலும் நமக்கு ஈடானவர்கள் யார் உள்ளனர்?