Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 16)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
நீளவந்து இன்று விதிவகையால் நினைவொன்றிய நாம் மீளவந்து இன்னும் வினை உடம்பு ஒன்றி விழுந்துழலாது ஆளவந்தார் எனவென்று அருள் தந்து விளங்கிய சீர் ஆளவந்தார் அடியோம் படியோம் இனி அல்வழக்கே
நீண்ட காலமாக சம்ஸாரம் என்றும் பிடியில் சிக்கியபடி உள்ளோம். நாம் இதற்குப் பிறகும் கர்மம் காரணமாக வெறும் மற்றொரு உடலைப் பெற்று வருத்தமடையாதபடி நம்மைக் காக்க ஆளவந்தார் அவதரித்தார். இப்படிப்பட்ட ஆளவந்தாரின் திருவடிகளில் நாம் அடிபணிந்தோம். அவர் தனது வாதங்கள் மூலம் மற்ற மதத்தவர்களை வென்று நம்மையும் காத்தார். இனி நாம் அவருடைய ஞூல்கள் அல்லாமல் வேறு எந்த சாஸ்திரங்களையும் படிக்கமாட்டோம்.