Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 15)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
ஆரண நூல் வழிச் செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர் வாரணமய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான் ஏரணி கீர்த்தி இராமாநுசமுநி இன்னுரை சேர் சீரணீ சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே
வேதாந்த விஷயத்தை விளக்கும் உயர்ந்த ஞூல் ப்ரஹுfமசூத்திரம் ஆகும். அது கூறும் உண்மையான மார்க்கத்தை தங்களின் தவறான வாதங்களால் பலரும் அழித்தனர். இந்நிலையில் அவர்களின் வாதங்களை, வாழை மரங்களை அழிக்கும் யானைப் போன்று, நம்முடைய ராமானுஜர் சாய்ந்தார். இப்படி பெரிய உதவிகள் செய்தவரும், இந்த உலகிற்கு ஏற்ற அலங்காரமாகத் தனது புகழை உடையவரும் ஆகிய ஸ்ரீபாஷ்யக்காரரின் இனிமையான சொற்களிலும், அவரது சிறந்த குணத்திலும் எங்கள் மனதை வைத்தோம். இவற்றைவிட வேறு சாஸ்திரங்களையும் கர்மங்களையும் எண்ணமாட்டோம்.