Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 14)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸந ரஸிக ஹயக்ரீவ ஹேஷா உர்மி தோஷ க்ஷிப்த ப்ரத்யர்தி த்ருப்தி: பஹுகுணா பங்க்தி: அஸ்மத் குரூணாம் திக் ஸௌத ஆபத்த ஜைத்ர த்வஜ பட பவந ஸ்பாதி நிர்த்தூத தத் தத் ஸித்தாந்தஸ்தோம தூலஸ்தபக விகமந வ்யக்த ஸத் வர்த்தநீகா

மற்ற குரு பரம்பரையைக் காட்டிலும் சிறந்த குணங்கள் கொண்ட நமது குருபரம்பரை எப்படிப்பட்டது? நம் ஆசார்யர்களின் இதய கமலத்தை மிகவும் விரும்பி ஹுயக்ரீவன் வீற்றுள்ளான். இவனது கனைப்புகள் மூலமே, (ராமானுஜரின் ஸித்தாந்தங்களை) எதிர்த்து வாதம் செய்பவர்களையும், அவர்கள் கர்வத்தையும், நமது ஆசார்யர்கள் அடக்குகின்றனர். இவர்களுடைய புகழ் என்பது அனைத்து திசைகள் என்ற வெற்றித்தூண்கள் மேது கட்டப்பட்டுள்ளன. அந்தத் தூண்களில் உள்ள கொடிகள் மூலம் மற்றவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பருத்திக் கொத்துகள் போன்று காற்றில் தள்ளப்படுகின்றன. இதுவே வாதத்தில் வெல்வதில் சிறந்த வழியாகும்.