Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 13)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

ஏதே மஹ்யம் அபோட மந்மத ஸார உந்மாதாய நாதாதய: த்ரய்யந்த ப்ரதிநந்தநீய விவித உதந்தா: ஸ்வதந்தாம் இஹ ச்ரத்தாதவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா: ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவீ வைதேசிகா தேசிகா:

கடந்த ச்லோகத்தில் கூறப்பட்ட நாதமுனிகள் முதலான ஆசார்யர்கள் எப்படிபட்டவர்கள்? வேதாந்தங்களே புகழவேண்டிய தூய சரிதம் உடையவர்கள், நாம் சரணம் அடைய ஏதுவாக உள்ள, கல்யாண குணங்கள் நிறைந்த, திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கையை எங்கும் ஓடச் செய்தவர்கள், போட்டி, வஞ்சனை முதலானவற்றுக்கு எதிர்த்தட்டாக உள்ளவர்கள் ஆவர். இப்படிப்பட்ட இவர்கள் மன்மதனின் பிடியுலிருந்து என்னை விலக்கவேண்டும். பரமபதத்தை அடைந்து, நான் பெரும் இன்பங்களை இவர்கள் (ஆசார்யர்கள்) மூலமே கிட்டும்படிச் செய்யவேண்டும்.