Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 12)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப் பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன் அமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

என்னுடைய ஆத்ம ஸ்வரூபமாக பகவான் உள்ளான் என்று உபதேசித்து, என்னைக் காத்த, எனது குருவை சரணம் என்று அடைந்தேன். அவருடைய ஆசார்ய பரம்பரையையும் சரணம் என்று அடைந்தேன். அந்த குருபரம்பரையின் அருள் காரணமாக, ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த உடையவர், அவருடைய குரு பெரியநம்பி, பெரியநம்பியின் குரு ஆளவந்தார், மணக்கால் நம்பி, சிறந்த வழியை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார், நாதமுனிகள், நம்மாழ்வார், சேனைமுதலியார், எம்பெருமாளுக்கு அமிர்தம் போன்றுள்ள பெரியபிராட்டியார் ஆகியோரை வணங்கி, பெரியபெருமாள் திருவடியை அடைகின்றேன்.