Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 9)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
வைணவ குரு பரம்பரை
மூலம் - பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார் எம்பெருமானார், மலைகுனிய நின்றார், ஆர்ய ஸ்ரீசடகோபதாஸர், அணியரங்கத் தமுதனார், திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி.
பெரியநம்பியின் திருவடிகளை அண்டி இருந்தவர்கள் 6 பேர் - எம்பெருமானார் (உடையவர்), மலைகுனியநின்றார், ஆரிய ஸ்ரீ சடகோபதாஸர், அணியரங்கத்தமுதனார், திருவாய்க்குளமுடையான் பட்டர் மற்றும் திருக்கச்சிநம்பி ஆகியோர் ஆவர்.