Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 8)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
வைணவ குரு பரம்பரை
மூலம் - ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர். அவர்களாகிறார் பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார், திருமலை நம்பி, ஈசாண்டான், தெய்வவாரியாண்டான், சிறியாண்டான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார், பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர், மாறனேர் நம்பி, ஆள்கொண்டி.
ஆளவந்தாரின் திருவடிகளை அண்டியிருந்தவர்கள் பதினைந்து பேர் - பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் திருமலைநம்பி, ஈசாண்டான், தெய்வவாரிஆண்டான், சிறியாண்டான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார், பிள்ளைத் திருமாலிருஞ்சோலை தாஸர், மாறனேர் நம்பி மற்றும் ஆள்கொண்டி ஆகியோர் ஆவர்.